திங்கள், 7 மே, 2012

ஒன்னுமே புரியலே உலகத்திலே..


ஒன்னுமே புரியலே உலகத்திலே..

                        படிக்கும் நாட்களில் நண்பன் பிச்சு மணி சொல்வான். அதிகம் ஆசை படக்கூடாது. ஏன்னா ஆசையே துன்பத்துக்கு காரணம்.புத்தர் கூட இதைத்தான் "Desire is the cause of Misery" என்று சொல்லி இருக்கார்,என்பான்.பிச்சுமணிக்கு தன்னம்பிக்கை இல்லாமல் இல்லை.Over Condidence கூடாது என்று நினத்து இருக்கலாம்.அல்லது அடுத்தவனை பலவீன மாக்க இதே சிறந்த ஆயுதம் என்று கூட எண்ணி இருக்கலாம்.அவன் வரை நட்புக்கு ஒரு எல்லை உண்டு.ஓய்வு நேர பொழுது போக்கிற்கு சில வரவேற்பு அறை உறவுகளுண்டு அவனுக்கு.அந்த லிஸ்டில் நண்பர்களும் அடங்குவார்கள்.
            அவன் சொன்ன பழ மொழி விளக்கம்- நிறை குடம் தளும்பாது-காலி குடமும் தளும்பாது.காலி குடம் எதிராளி.இந்த கதையும் அவன் சொன்னதுதான்.
           ஓர் ஊரில் ஒரு காக்காய் இருந்தது.அதற்கு அதிக வெப்பத்தால் மிகவும் தண்ணீர் தாகம் எடுத்தது.கடுங்க் கோடை காரணத்தால் குளம் குட்டைகள் நீர் இன்றி வற்றி போயிருந்தன.ஆங்காங்கே ரோடுகளில் சாக்கடை தண்ணீர் மட்டும் தேங்கி இருந்தது. தூரத்தில் ஒரு மொட்டை மாடியில் ஒரு ஜாடியும்,அருகே கூழாங்கற்கள் குவியனும் இருந்தது.ஆர்வமாய் காகம் பறந்து போய் படிப்பறிவு காரணத்தால் ஒவ்வொரு கூழாங்கற்களாய் அலகால் எடுத்து ஜாடியில் போடத் துவங்கியது.கடைசி கல்லை போட்ட பின்னர் தான் தெரிந்தது ஜாடியில் தண்ணிரே இல்லாதது.காகம் தான் தண்ணீர் இருக்கும் என் தவறான கற்பனையில் இருந்துவிட்டது.
             வழியில் இருந்த சாக்கடை நீரை பருக்காமல் வந்தது காகத்தின் தப்பு.இதன் மூலம் பிச்சுமணி சொல்லாமல் சொல்லுவது-
1) இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசை படாதே.
2)   ஏட்டு சுரைக்காய் தாகத்தை தணிக்காது.
                                                               
            பிச்சுமணிக்கு நல்ல வேலை கிடைத்து,வசதியான பெண்ணை மணந்து கொண்டான்.சில நாட்களிலிலேயே கார், பங்களா என சமுகத்தில் மேல் மட்ட நிலைக்குப் போய் விட்டான்.ஒரு வீட்டு வீசேஷத்துக்கு அழைத்தபோது வந்த பிச்சுமணி பிரசெண்ட் செய்த புத்தகத்தின் பெயர்" அனைத்துக்கும் ஆசை படு".
                                  இதானால் பெறும் குழப்பம் தான் மிஞ்சியது. ஆசைதான் துன்பத்துக்கு காரணமா? பட்டாடை வேண்டி ஆசைப்பட்டால் ஒரு கதராடையாவது கிட்டும் என்பது நிஜமா?
                                புரியாமல் ஒரு குவாட்டர் பாட்டிலும் கால் கிலோ சேட் கடை மிக்ஸரும் வாங்கிக் கொண்டு,ஒராமாய் போன கொஞ்ச நேரத்தில் மிக்ஸர்  தீர்ந்து விட்டது.கட்டி வந்த காலி பேப்பர் மட்டும் காற்றில் ஆடிக் கொண்டு இருந்தது. அது ஒரு பிரபல வார பத்திரிக்கையின் ஒரு பக்கம்.பெரிய எழுத்தாளரின் தொடர்கதை அப்பக்கத்தில் பிரசுரமாகி இருந்த்து. அக்கதையின் ஆரம்பத்தில் ஆசிரியர் ஒரு கவிதையின் முதல் இரண்டு வரிகளை கையாண்டிருந்தார்.
" தேடாதே இங்கு வழிகள் மாற்றி வைக்கப்பட்டுள்ளது"
                                                                                  -- கவிஞர் புவியரசு

தூரத்தில் இருந்து காற்றில் பாடல் ஒன்று மிதந்து வந்தது
." ஒன்னுமே புரியலே உலகத்திலே, என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது, ஒன்னுமே புரியலே உலகத்திலே, "    

வெள்ளி, 4 மே, 2012

மூன்று முகன்


                               முன்று நண்பர்கள் அந்த உலக புகழ் வாய்ந்த அரங்கத்தை பார்க்க வந்திருந்தனர்.அவர்களில் ஒருவன் அமெரிக்கன்,ஒருவன் ரஷ்யன்,ஒருவன் நம்மாள்.அந்த அரங்கம் நுணுக்கமான கலை வேலைபாடுகளுடன், வண்ண லஸ்தர் விளக்குகளை க்கொண்ட உயர் கூரைகளுடன் கூடிய பளிங்கு கற்களால் கட்டப்பட்ட அரண்மணை போல் இருக்கும்.ஆயிரம் பேர் அமரக்கூடிய அரங்கு.பெரிய மேடை.மெழுகு வர்த்தி சர விளக்குகள்.எப்போதும் அத்தர் மணம் கமழும் மெல்லிய இருட்டு ;எட்டு உயரமான வாசல்கள்.பத்து சகல வசதிகளுடன் கூடிய தங்கும் அறைகள்.ஆறு சுகாதார வசதியுடன் கூடிய கழிப்பறைகள்.எங்கிருந்து பார்த்தாலும் மேடையும் அதில் நடைபேறும் நிகழ்வும் நன்கு தெரியும்.

                                         
                         அதை பார்த்த அமெரிக்கன் உலக அறிவாளிகளை அழைத்து நல்ல out sourcing பற்றிய செமினார் நடத்தலாம் என்று சொன்னான்.ரஷ்யன் சமுதாயா மேம் பாட்டிற்கு உதவக்குடிய Relevant இடது சாரி கொள்கைகளை விளக்கும் நவின நாடகம் ஒன்றை நிகழ்த்தலாம் என்று விருப்பப்பட்டான்.நம்மாள் கழிப்பறைகளை காண்டிராக்ட்டுக்கு விடும் முன் முந்திக் கொண்டு சுகமாய் ஆய்' போய் வந்துவிட்டால் நன்றாக இருக்குமே என்று என்று தன் உள்ளக் கிடக்கயை சொன்னான்.    


   

வெள்ளி, 2 மார்ச், 2012

"En" கதைகள்


                                                               "யென்" கதைகள்
                                                   'தவ'த்தின் வலிமை
ஒரு ஊரில் ஒரு ரிஷி இருந்தார். அவர் ஊர் outskert  முடிவில், இருக்கும் காட்டில் வாழ்ந்து வந்தார்.இக பர சுகங்களில் மனதை செலுத்தாமல்,  ஜபம்,தவம் தியானம் என்று மெய் ஞானத்தேடலில் இருந்து வந்தார்.அவருக்கு ஆஸ்தி என எதுவும் கிடையாது.இருந்த ஒரு கௌபீனத்தை உலர்த்தி கட்டிக் கொண்டிருந்தார்.குளித்து விட்டு கௌபீனம் உலர்வதற்காக காத்திருக்கும் சந்தர்பங்களில் தன் அம்மணத்தை தானே பார்க்க பிடிக்காமல் இன்னொரு கௌபீனம் இருந்தால் நல்லாயிருக்குமே என்ற எண்ணத்தில் இன்னும் ஒரு கௌபீனத்தை தேடிக் கொண்டார்.காய்ந்து கொண்டிருந்த அவர் கௌபீனத்தை எலி கடித்து விட்டது.கிழிசல் கௌபீனதை ,replace செய்து புதிய ஒன்றை ரிஷி சம்பாதித்துக் கொண்டார்.அதையும் எலி மீண்டும் கடித்து விட்டது. பலத்த யோசனைக்குப்பின் ரிஷி எலியை பிடிக்க ஒரு பூணை ஒன்றை வாங்கி வளர்க்க ஆரம்பித்தார்.பூணைக்கு அடிக்கடி பால் வைக்க வேண்டியதாய் இருந்ததால், ஒரு மாடு ஒன்றை வாங்கினார் ரிஷி.மாடு மேய வனாந்திர ஆரம்பத்தில் புறம் போக்கு நிலத்தில் ஆசிரம ஸ்டெயிலில் பர்ணசாலை ஒன்று அமைத்து தானுண்டு தன் வேலை உண்டு என்று தான் இருந்தார். அந்த மாட்டை பார்த்துக் கொள்ள போடும் சாணியை அள்ளி மாட்டை குளிப்பாட்டி பால் கறக்க ஒரு பெண் தேவைபட்டாள்.
ரிஷி நடுத்தர வயது மாது ஒருவளை இதற்காக வைத்துக் கொண்டார்.
 ஒரு நாள் இரவு குளிர் அதிகமாய் இருந்தது.அருகில் இருந்த அவளை பார்த்து ரிஷீ கேட்டார்" உன் பெயர் என்ன?. அதற்கு அவள், ரிஷி அருகில் மூச்சுக் காற்று படும் தொலைவில் நெருங்கி வந்து, "தவம்-தவம் என்கிற தவ மணி" என்றாள்
 இன்று தான் நான் தவத்தின் வலிமையை உணர்ந்தேன் என்று முனகியபடி ரிஷி தவத்துக்குள் இறங்கி விட்டார்.
அதன் பின்னர் அவர் கௌபீனத்தை எலி கடிப்பதில்லை.