முன்று நண்பர்கள் அந்த உலக புகழ் வாய்ந்த அரங்கத்தை பார்க்க வந்திருந்தனர்.அவர்களில் ஒருவன் அமெரிக்கன்,ஒருவன் ரஷ்யன்,ஒருவன் நம்மாள்.அந்த அரங்கம் நுணுக்கமான கலை வேலைபாடுகளுடன், வண்ண லஸ்தர் விளக்குகளை க்கொண்ட உயர் கூரைகளுடன் கூடிய பளிங்கு கற்களால் கட்டப்பட்ட அரண்மணை போல் இருக்கும்.ஆயிரம் பேர் அமரக்கூடிய அரங்கு.பெரிய மேடை.மெழுகு வர்த்தி சர விளக்குகள்.எப்போதும் அத்தர் மணம் கமழும் மெல்லிய இருட்டு ;எட்டு உயரமான வாசல்கள்.பத்து சகல வசதிகளுடன் கூடிய தங்கும் அறைகள்.ஆறு சுகாதார வசதியுடன் கூடிய கழிப்பறைகள்.எங்கிருந்து பார்த்தாலும் மேடையும் அதில் நடைபேறும் நிகழ்வும் நன்கு தெரியும்.
அதை பார்த்த அமெரிக்கன் உலக அறிவாளிகளை அழைத்து நல்ல out sourcing பற்றிய செமினார் நடத்தலாம் என்று சொன்னான்.ரஷ்யன் சமுதாயா மேம் பாட்டிற்கு உதவக்குடிய Relevant இடது சாரி கொள்கைகளை விளக்கும் நவின நாடகம் ஒன்றை நிகழ்த்தலாம் என்று விருப்பப்பட்டான்.நம்மாள் கழிப்பறைகளை காண்டிராக்ட்டுக்கு விடும் முன் முந்திக் கொண்டு சுகமாய் ஆய்' போய் வந்துவிட்டால் நன்றாக இருக்குமே என்று என்று தன் உள்ளக் கிடக்கயை சொன்னான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக