ஒன்னுமே புரியலே உலகத்திலே..
படிக்கும் நாட்களில் நண்பன் பிச்சு மணி சொல்வான். அதிகம் ஆசை படக்கூடாது. ஏன்னா ஆசையே துன்பத்துக்கு காரணம்.புத்தர் கூட இதைத்தான் "Desire is the cause of Misery" என்று சொல்லி இருக்கார்,என்பான்.பிச்சுமணிக்கு தன்னம்பிக்கை இல்லாமல் இல்லை.Over Condidence கூடாது என்று நினத்து இருக்கலாம்.அல்லது அடுத்தவனை பலவீன மாக்க இதே சிறந்த ஆயுதம் என்று கூட எண்ணி இருக்கலாம்.அவன் வரை நட்புக்கு ஒரு எல்லை உண்டு.ஓய்வு நேர பொழுது போக்கிற்கு சில வரவேற்பு அறை உறவுகளுண்டு அவனுக்கு.அந்த லிஸ்டில் நண்பர்களும் அடங்குவார்கள்.
அவன் சொன்ன பழ மொழி விளக்கம்- நிறை குடம் தளும்பாது-காலி குடமும் தளும்பாது.காலி குடம் எதிராளி.இந்த கதையும் அவன் சொன்னதுதான்.
ஓர் ஊரில் ஒரு காக்காய் இருந்தது.அதற்கு அதிக வெப்பத்தால் மிகவும் தண்ணீர் தாகம் எடுத்தது.கடுங்க் கோடை காரணத்தால் குளம் குட்டைகள் நீர் இன்றி வற்றி போயிருந்தன.ஆங்காங்கே ரோடுகளில் சாக்கடை தண்ணீர் மட்டும் தேங்கி இருந்தது. தூரத்தில் ஒரு மொட்டை மாடியில் ஒரு ஜாடியும்,அருகே கூழாங்கற்கள் குவியனும் இருந்தது.ஆர்வமாய் காகம் பறந்து போய் படிப்பறிவு காரணத்தால் ஒவ்வொரு கூழாங்கற்களாய் அலகால் எடுத்து ஜாடியில் போடத் துவங்கியது.கடைசி கல்லை போட்ட பின்னர் தான் தெரிந்தது ஜாடியில் தண்ணிரே இல்லாதது.காகம் தான் தண்ணீர் இருக்கும் என் தவறான கற்பனையில் இருந்துவிட்டது.
வழியில் இருந்த சாக்கடை நீரை பருக்காமல் வந்தது காகத்தின் தப்பு.இதன் மூலம் பிச்சுமணி சொல்லாமல் சொல்லுவது-
1) இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசை படாதே.
2) ஏட்டு சுரைக்காய் தாகத்தை தணிக்காது.
பிச்சுமணிக்கு நல்ல வேலை கிடைத்து,வசதியான பெண்ணை மணந்து கொண்டான்.சில நாட்களிலிலேயே கார், பங்களா என சமுகத்தில் மேல் மட்ட நிலைக்குப் போய் விட்டான்.ஒரு வீட்டு வீசேஷத்துக்கு அழைத்தபோது வந்த பிச்சுமணி பிரசெண்ட் செய்த புத்தகத்தின் பெயர்" அனைத்துக்கும் ஆசை படு".
இதானால் பெறும் குழப்பம் தான் மிஞ்சியது. ஆசைதான் துன்பத்துக்கு காரணமா? பட்டாடை வேண்டி ஆசைப்பட்டால் ஒரு கதராடையாவது கிட்டும் என்பது நிஜமா?
புரியாமல் ஒரு குவாட்டர் பாட்டிலும் கால் கிலோ சேட் கடை மிக்ஸரும் வாங்கிக் கொண்டு,ஒராமாய் போன கொஞ்ச நேரத்தில் மிக்ஸர் தீர்ந்து விட்டது.கட்டி வந்த காலி பேப்பர் மட்டும் காற்றில் ஆடிக் கொண்டு இருந்தது. அது ஒரு பிரபல வார பத்திரிக்கையின் ஒரு பக்கம்.பெரிய எழுத்தாளரின் தொடர்கதை அப்பக்கத்தில் பிரசுரமாகி இருந்த்து. அக்கதையின் ஆரம்பத்தில் ஆசிரியர் ஒரு கவிதையின் முதல் இரண்டு வரிகளை கையாண்டிருந்தார்.
" தேடாதே இங்கு வழிகள் மாற்றி வைக்கப்பட்டுள்ளது"
-- கவிஞர் புவியரசு
தூரத்தில் இருந்து காற்றில் பாடல் ஒன்று மிதந்து வந்தது
." ஒன்னுமே புரியலே உலகத்திலே, என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது, ஒன்னுமே புரியலே உலகத்திலே, "