"யென்" கதைகள்
'தவ'த்தின் வலிமைஒரு ஊரில் ஒரு ரிஷி இருந்தார். அவர் ஊர் outskert முடிவில், இருக்கும் காட்டில் வாழ்ந்து வந்தார்.இக பர சுகங்களில் மனதை செலுத்தாமல், ஜபம்,தவம் தியானம் என்று மெய் ஞானத்தேடலில் இருந்து வந்தார்.அவருக்கு ஆஸ்தி என எதுவும் கிடையாது.இருந்த ஒரு கௌபீனத்தை உலர்த்தி கட்டிக் கொண்டிருந்தார்.குளித்து விட்டு கௌபீனம் உலர்வதற்காக காத்திருக்கும் சந்தர்பங்களில் தன் அம்மணத்தை தானே பார்க்க பிடிக்காமல் இன்னொரு கௌபீனம் இருந்தால் நல்லாயிருக்குமே என்ற எண்ணத்தில் இன்னும் ஒரு கௌபீனத்தை தேடிக் கொண்டார்.காய்ந்து கொண்டிருந்த அவர் கௌபீனத்தை எலி கடித்து விட்டது.கிழிசல் கௌபீனதை ,replace செய்து புதிய ஒன்றை ரிஷி சம்பாதித்துக் கொண்டார்.அதையும் எலி மீண்டும் கடித்து விட்டது. பலத்த யோசனைக்குப்பின் ரிஷி எலியை பிடிக்க ஒரு பூணை ஒன்றை வாங்கி வளர்க்க ஆரம்பித்தார்.பூணைக்கு அடிக்கடி பால் வைக்க வேண்டியதாய் இருந்ததால், ஒரு மாடு ஒன்றை வாங்கினார் ரிஷி.மாடு மேய வனாந்திர ஆரம்பத்தில் புறம் போக்கு நிலத்தில் ஆசிரம ஸ்டெயிலில் பர்ணசாலை ஒன்று அமைத்து தானுண்டு தன் வேலை உண்டு என்று தான் இருந்தார். அந்த மாட்டை பார்த்துக் கொள்ள போடும் சாணியை அள்ளி மாட்டை குளிப்பாட்டி பால் கறக்க ஒரு பெண் தேவைபட்டாள்.
ரிஷி நடுத்தர வயது மாது ஒருவளை இதற்காக வைத்துக் கொண்டார்.
ஒரு நாள் இரவு குளிர் அதிகமாய் இருந்தது.அருகில் இருந்த அவளை பார்த்து ரிஷீ கேட்டார்" உன் பெயர் என்ன?. அதற்கு அவள், ரிஷி அருகில் மூச்சுக் காற்று படும் தொலைவில் நெருங்கி வந்து, "தவம்-தவம் என்கிற தவ மணி" என்றாள்
இன்று தான் நான் தவத்தின் வலிமையை உணர்ந்தேன் என்று முனகியபடி ரிஷி தவத்துக்குள் இறங்கி விட்டார்.
அதன் பின்னர் அவர் கௌபீனத்தை எலி கடிப்பதில்லை.